சென்னை:
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவும், மீன் பிடிக்கவும், பரிசல் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel