டில்லி
வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் இந்தியாவில் கோதுமை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. பல்வேறு வகையான கோதுமைகள் இங்கு உற்பத்தி ஆகின்றன. எனவே அவை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது சர்வதேச அளவில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் உணவு பாதுகாப்புக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மிகவும் தடங்கல் ஏற்படும் என்பதால் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதி செய்யத் தடை விதித்து உத்தரவு இட்டுள்ளது. இதன்படி இந்தியாவிலிருந்து அனைத்து வகை கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.