டில்லி

ச்சநீதிமன்றம் முதுநிலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு வரும் மே 21 நடைபெறும் என அறிவித்துள்ளது.

இந்த 2022 ஆம் ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்த தேர்வை தள்ளி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சுமார் 6க்கும் அதிகமான மணுக்கள் அளிக்கப்பட்டன.   மனுக்களில், “தற்போது கடந்த 2021க்கான முதுநிலை நீட் கலந்தாய்வு நடந்து வருகிறது.  எனவே இந்த நீட் தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும்” என கோரப்பட்டது.

நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் வழக்கு நடந்தது.  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் உட்பட அனைவரும். ‘தற்போதைய 2021-க்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத வாய்ப்புள்ளது.  ஆகவே, வரும் 21ம் தேதி நடைபெறும் 2022ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்,’ என கோரினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முதுநிலை நீட் தேர்வை வரும் 21ம் தேதி நடத்தத் தடை விதிக்க முடியாது. இந்த விவகாரம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை.  எனவே தேர்வு தேதியை மாற்றக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என அறிவித்தனர்.