சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வரலாறு காணாத வகையில்,  இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கும், பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகிய எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடும், பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மின்சார தட்டுப்பாட்டால் மக்கள் வாடி வதங்கிவிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு தேவையான பால், பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கையில் உள்ள தமிழ் சகோதரர்கள் படும் துயரை போக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.  இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியஅரசிடம் தமிழக முதல்வர்  கோரிக்கை விடுத்தார். தொடர் நடவடிக்கையாக கடந்த மாதம் 7-ந் தேதி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரோடு தொலைபேசியில் பேசி இலங்கை தமிழர்களின் நலன் கருதி தமிழக அரசு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப தயாராக இருக்கிறது. இதை இந்திய தூதரகம் மூலமாக விநியோகிக்க உரிய அனுமதியும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போது தமிழகஅரசின் கோரிக்கைக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில்,  இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்

மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:

மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

 வங்கி கிளை: தலைமைச் செயலக கிளை. சென்னை – 600 009

சேமிப்பு வங்கி கணக்கு எண் :117201000000070

IFSC குறியீடு :IOBA0001172

CMPRF பான் எண்: AAAGC0038F

SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம்,

சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).

ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை தயவுசெய்து வழங்கவும்:

பங்களிப்பாளரின் பெயர்:

பங்களிப்பு தொகை:

வங்கி மற்றும் கிளை:

பணம் அனுப்பும் தேதி:

பரிவர்த்தனை குறிப்பு எண்:

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மின்னஞ்சல் முகவரி:

தொலைபேசி எண் /கைபேசி எண்.

UPI-VPA id: tncmprf@lob ungbgab PhonePe, Google Pay. Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள்.

காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:

The Joint Secretary to Government & Treasurer,

Chief Minister’s Public Relief Fund,

Finance (CMPRF) Department,

Secretariat, Chennai 600 009, Tamil Nadu, India.

அரசு இணைச் செயலாளர் & பொருளாளர்,

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி,

நிதி(மு.பொ.தி.நி) துறை. தலைமை செயலகம், சென்னை 600 009.

தமிழ்நாடு. இந்தியா.

என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கலாம். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.