சென்னை:
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், வெப்பச்சலனம் காரணமாக தெற்கு கடலோரம், உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.