சென்னை:
சட்டப்பேரவையில் இன்று நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் கூடியது. தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் செய்தி மற்றும் விளம்பரம், எழுது பொருள் மற்றும் அச்சுதுறை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.