மும்பை:
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிகப்ட்டமாக 103 ரன்கள் அடித்தார். மும்பை அணி பந்து வீச்சலர்க்ளில் ரிலே மெரிடித், கீரன் பொல்லார்ட் இருவரும் தலா 2 விக்கெட்களையும், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி, 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி 8-வது தோல்வியை சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் – சென்னை அணிகள் மோத உள்ளன.