சென்னை:
4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த நான்கு நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.