சென்னை:
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel