தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் விஜயகாந்த் இன்று தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருடன் உற்சாகமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்த நாளான இன்று மகனுக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் விஜயகாந்த்.