டெல்லி: இந்தியாவில் 2வது நாளாக கொரோனா உயிரிழிப்பின்றி, புதிதாக மேலும் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த கொரோனா பாதிப்பு என தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,  கடந்த 2 நாட்களாக புதிய உயிரிழப்புகள் இல்லை. அதேநேரம் விடுபட்ட 56 மரணங்கள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று மேலும் குறைந்துள்ளதாகவும், இது கடந்த 716 நாட்களில் இல்லாத அளவு என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 795 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 839 ஆக உயர்ந்தது.

கடந்த 2 நாட்களாக புதிய உயிரிழப்புகள் இல்லை. அதேநேரம் கேரளாவில்  விடுபட்ட 56 மரணங்கள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் என மேலும் 58 பேர் தொற்றால் இறந்துள்ளது இணைக்கப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,21,416 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில்  1,280பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரத்து 369ஆக உயர்ந்தது.

தற்போது 12,054 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 16,17,668 டோஸ்களும், இதுவரை 184 கோடியே 87லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 4,66,332 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 79.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.