சென்னை: தமிழக மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 111 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு தமிழக மாணவர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.
மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்தாய்வு மூலம் மாணவ-மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்iக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 15 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 41 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்களிலும் தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்க கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 436 இடங்களுக்கும் மருத்துவ படிப்புக்காக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்து, மாணவர்களும் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டின்படி, மத்தியஅரசுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ இடங்களில் 111 இடங்கள் இன்னும் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதன்படி, 85 எம்.பி.பி.எஸ். இடங்களும், 36 பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் 15 இடங்களும், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 5 இடங்களும் அடங்கும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆகியவற்றிலும் தலா ஒரு இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த தகவல மாநில தேர்வு குழு செயலாளர் டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான காலி இடங்களில் தமிழக மாணவர்களை சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.