சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்.

கதைகள் நிறைந்த நிலம் (ஏ லேண்ட் ஆப் ஸ்டோரிஸ்) என்ற தலைப்பில் ஐ-போன் 13 மினி மொபைல் போன் மூலம் மாணவர்கள் படம்பிடித்த மிகச் சிறந்த புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறது.

மேக்ஸ் முல்லர் பவன் மற்றும் சென்னை போட்டோ பியன்னேல் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கண்காட்சி ஏப்ரல் 17 ம் தேதி வரை நடைபெறுகிறது.

பலதரப்பட்ட மக்கள், உணவு, கட்டிடக்கலை, இயற்கைக்காட்சிகள் மற்றும் கலாச்சாரச் சுவடுகளுடன், தமிழ்நாட்டின் செழுமையை இந்த படங்கள் பிரதிபலிக்கின்றன.

எழும்பூர் அருங்காட்சியகம் தவிர சென்னை வி.ஆர். மால் வளாகத்திலும் வார இறுதி நாட்களில் இந்த மாணவர்களின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.