சென்னை: அமைச்சர் ரகுபதி தலைமையில் அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும் மாநிலம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர். தற்போது அரசு தலைமை வழக்கறிஞராக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான திமுக வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்களாக பதவி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் ரகுபதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது உள்பட பல்வேறு வழக்குகளை கையாள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.