டில்லி

டுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இன்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் அந்தமான்- நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலு பெறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயரிட்டுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான்- நிக்கோபர் தீவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இப்போதைய வானிலை செயற்கைக்கோள் நிலவரப்படி ‘அசானி’ புயல் வடக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மியான்மரின் தென்கிழக்கே வங்காள தேச கடல் பகுதியில் 22-ந்தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.