புதுடெல்லி:
நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மக்களவையில் நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு நோட்டிஸ் வழங்குகிறார். மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி சபாநாயகருக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் தர கோரி திமுகவினர் ஏற்கனவே கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel