2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்றவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து அந்தந்த வார்டு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேச இந்த தொடர்பு எங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது உள்ளது.

மேலும், தேர்தல் முடிந்த பின்பும் வாக்காளருக்கும் மாமன்ற உறுப்பினருக்குமான தொடர்பு தொடரும் வகையிலும் வார்டு மேம்பாட்டிற்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரை முறையே 044-25619300 / 044-25384438 மற்றும் 044-25619210 / 044-25382979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel