இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ராஜஸ்தான் ராயல் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் மாலிங்க இந்த சீசன் முதல் ராஜஸ்தான் ராயல் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.

இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் இவர் ஆஸ்திரேலிய அணியுடன் இலங்கை அணி சமீபத்தில் விளையாடிய டி-20 தொடருக்கு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.