டெல்லி: இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4184 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,184 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. 31வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 488 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் 6 ஆயிரத்து 554 பேர். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 104 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 1,79,53,95,649 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 23 ஆயிரத்து 329 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.