சென்னை: சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 5 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை விருது அறிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, கடந்த 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான விருதுகளை தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
2016-17 ஆண்டுக்கான விருது – விருதுநகர் ஆட்சியர் சிவஞானம்
2017-18 ஆண்டுக்கான விருது – திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ்
2018 -19 ஆண்டுக்கான விருது -சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்
2019-20ஆண்டுக்கான விருது -விருதுநகர் ஆட்சியர் சிவஞானம்
2020-21-ஆண்டுக்கான விருது – திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி
ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.