டெல்லி: உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன என ரஷ்ய அதிபர் சொன்னதாக வந்த செய்தி தவறு என இந்திய வெளியுறவுத்துறை மறுக்கிறது.
உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மாணவர்களை ரஷிய துருப்புகள் பிணைக்க்கைதியாக வைத்துக்கொண்டு மிரட்டுவதாக ரஷயா தெரிவித்ததாக தகவல்கள் பரவின. உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததாக என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் மாணவர்களை ரஷ்யப் படைகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் பதிலுக்கு குற்றம் சாட்டி இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
இது இந்தியா உள்பட பல நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ஏற்கனவே அமெரிக்கா மறுத்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல் என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைன் அரசும் ரஷ்யாவிடம் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாணவர்களை வெளியேற்ற பாதை விடும்படி வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பிணைக்க்கைதிகளாக வைத்து மிரட்டுவதாக வெளியான தகவல் பொய்யானது என்றும், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு ‘வெளியுறவு அமைச்சகம்’ பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “உக்ரைனிலுள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் நேற்று பல மாணவர்கள் கார்கிவ் நகரைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக எந்த புகாரும் வரவில்லை.
கார்கிவ் மற்றும் பிற நகரங்களிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு வருவதற்கு இந்திய மாணவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க உக்ரைன் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரஷியா, போலாந்து, ரோமானியா, கங்கரி உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். சில நாள்களிலேயே அதிகளவிலான இந்தியர்கள் உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் அதிகாரிகளின் இந்த உதவிக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்.
இந்தியர்களை தங்க வைத்த உக்ரைனின் மேற்கு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்