டில்லி
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மத்திய சட்ட அமைச்சக செயலர் அனூப் குமார் மெண்டிரண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சக செயலாளராக அனூப் குமார் மெண்டிரண்டா பதவி வகித்து வருகிறார். இவர் ஏற்கனவே டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு அவர் மத்திய சட்ட அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மத்திய சட்டத்துறை அமைச்சக செயலாளர் அனூப் குமார் மீ நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய நாட்டின் வரலாற்றில் சட்டத்துறை அமைச்சக செயலாளர் நீதிபதியா நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Patrikai.com official YouTube Channel