பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.

இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். வி ஆல் புரடக்சன், ஆர்.ஆர்.பி. நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடனம்- வினோத் ,சண்டைக் காட்சிகள் வீரா, தயாரிப்பு ராபர்ட் ரா

சஸ்பென்ஸ் திரில்லர் ரகமாக இருக்கும் இந்தப் படம், பல்வேறு வணிக அம்சங்களுடன் நகைச்சுவையும் கலந்து உருவாகிறது. இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய மொழிகளில் பிரபலமான முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு இது புதிய நடிப்பு அனுபவமாக இருக்கும்.

‘டிங் டாங் ‘ படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை நடன இயக்குநர் பிரபுதேவா இன்று வெளியிட்டார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஜே.எம் பேசும்போது, “நானும், எனது சகோதரர் ராபர்ட்டும் பிரபு தேவாவின் தீவிர ரசிகர்கள். அவரது மாணவர்களும் கூட. எனது இயக்கத்தில் ஏற்கெனவே ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இரண்டாவது படமாக ‘டிங் டாங்’ உருவாகிறது. டிங் டாங் என்றாலே கடிகாரம் என்பது அனைவருக்கும் நினைவில் வரும். அதுபோல் தான் இப்படத்தின் கதையும் காலத்தினை முக்கியமான மையமாக வைத்து உருவாகிறது” என்றார்.