டில்லி
இந்தியாவில் 8,31,087 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,501 பேர் அதிகரித்து மொத்தம் 4,28,38,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 306 அதிகரித்து மொத்தம் 5,12,109 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,901 பேர் குணமடைந்து இதுவரை 4,21,24,284 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,02,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று இந்தியாவில் 7,00,706 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 175,46,25,710 ஆகி உள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவுவதால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,31,087 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 76,01,46,333 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று 80,755 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,38,90,901 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.