பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது, லேசான சளி அறிகுறி உள்ளதாகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறியுள்ளது.

95 வயதாகும் ராணி எலிசபெத் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை மிக நீண்டகாலம் ஆட்சி செய்பவர் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இவர் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.