டெல்லி: ஸ்வீட் செல்ஃபி, பியூட்டி காமிரா உள்பட மேலும் 54 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்திய அரசு ஏற்கனேவ 326 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது மேலும், 54 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது.
2020ம் ஆண்டு ஆகஸ்டு 30ந்தேதி, முதல்கட்டமாக 59 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு ஐடி விதிகள் பிரிவு 69A கீழ் தடை செய்யப்பட்டுவதாக அறிவித்தது. அதன்படி, டிக்டாக், யூசி பிரவுசர், பப்ஜி, ஹலோ, அலி எக்ஸ்பிரஸ், லைகி, ஷேர்இட், மி கம்யூனிட்டி, வீ சேட், மைடூ, வெய்போ, பீகோ, லைவ் என பல செயலிகள் தடை செய்யப் பட்டது. பின்னர், 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 326 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தற்போது தற்போது (2022, பிப்ரவரி 14ந்தேதி) மேலும், 54 சீன செயலிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது. இவைகள், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பியூட்டி கேமரா , ஸ்வீட் செல்ஃபி எச்டி, செல்ஃபி கேமரா, ஈக்வலைசர் & பாஸ் பூஸ்டர், கேம்கார்டு ஃபார் சேல்ஸ்ஃபோர்ஸ் என்ட், ஐசோலண்ட் 2, ஆஷஸ் ஆஃப் டைம் லைட், விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் எக்ஸ்ரைவர், ஆன்மியோஜி அரேனா, டூயல் ஸ்பேஸ் லைட் உள்பட 54 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. மேலும், பிரபல ஆன்லைன் வர்த்தக செயலியான அலிபாபா, டென்செண்ட், நெட் ஈஸ் உள்ளிட்ட செயலிகளுக்கும் தடை என தகவல் வெளியாகி உள்ளது.