மனோதத்துவ நிபுணரான நாயகன் கிஷன், கனவு தொல்லையால் பாதிக்கப்படுகிறார். இந்நிலையில், பேய் இருக்கிறதா இல்லையா என்கிற டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். அப்போது பேய் இல்லை என்று கூறும் கிஷனை ஒரு வீட்டில் தங்கும் படி சொல்கிறார்கள். கிஷனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
பேய் இருப்பதாக கூறப்படும் வீட்டிற்கு செல்லும் கிஷனுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்.
இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? கிஷனுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கிஷன், கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். நாயகன் என்ற தோரணையை தவிர்த்து, கதாபாத்திரத்துடன் இயைந்து நடித்திருக்கிறார்.
கிஷனுக்கு உதவியாளராக வரும் நாயகி நந்தினி ராயும், சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக பயப்படும் காட்சிகளில் சிறப்பு.
இன்னொரு நாயகியாக வரும் ஸ்ரீதா சிவதாஸ், பல இடங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.
செய்வினை, சூனியம் வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் தமிழ்செல்வன்.
கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது இயக்குநரின் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது.
முத்து கணேஷ் இசையில் ஒரேயொரு புரமோ பாடல் மட்டுமே. டி.ராஜேந்தர் பாடிய அந்த பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். குரு தேவின் ஒளிப்பதிவு நன்று.
மொத்தத்தில் ‘அஷ்டகர்மா’ மிரட்டல்!