புதுடெல்லி:
போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதால்தான் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற முறை கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்தை இன்னும் சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் அதிக போலி ரேஷன் அட்டைகள் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலம் என்றும், அம்மாநிலத்தில் மட்டும் 1.70 கோடி போலி ரேஷன் அட்டைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது