சென்னை

ற்போது தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முதல் முறையாக ஆனலைனில் தொடங்கி உள்ளது

கடந்த மாதம் 27 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. இதில் கலந்தாய்வு நடைமுறையில் மாறுதல்கள் செய்யப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்வதை மட்டும் 30ம் தேதி காலை 10 மணிக்கு https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் தொடங்கியது.

தற்போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 பேர் இடம் பெற்றுள்ளனர்,  இதில் பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு (நீட் மதிப்பெண் – 710 முதல் 410 வரை) அழைப்பு விடுக்கப்பட்டது.

மாணவ மாணவிகள் நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்தனர். நேற்று அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வெளியானதால், திட்டமிட்டபடி தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

”பிப்ரவரி 5ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். பிறகு 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். அதன் பிறகு 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

இந்த மாதம் 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாணவர்கள் 17ம் தேதி முதல் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும்” என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.