சென்னை

கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தமிழக முதல்வர் ஆலொசனை நடத்த உள்ளார்.

 

கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாநிலம் எங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபப்ட்டு வருகிறது.  இவை வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஏற்கனவே ஜனவரி 9, 16 மற்றும் 23 தேதிகளில் முழு ஊரடங்கு அனுசரிக்கபட்டது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்ரு குறைந்துள்ளது.  குறிப்பாக சென்னை, , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை , சேலம் ஈரோடு,, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.   அதே வேளையில் உயிர் இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு விலக்கப்படலாம் என அறிவித்திருந்தார்.  இந்நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.   இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கு பெற உள்ளனர்.