டில்லி

ருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரானை கண்டறிய புதிய கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  தற்போது இது இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் பரவி வருகிறது.  இதையொட்டி இந்தியாவில் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தொற்றைக் கண்டறிய ஒரு ஆர்டி பிசிஆர் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த கருவி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு (சி எஸ் ஐ ஆர்) மற்றும்  மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சி டி ஆர் ஐ) ஆகியவற்றின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓம் என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவுக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.  இந்த அனுமதி கிடைத்ததும் இந்த கருவி பயன்பாட்டுக்கு வர உள்ளது. அனேகமாகப் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரும் இந்த கருவி மூலம் 2 மணி நேரத்தில் சோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.