இந்த ஆண்டு கொரோனாவுக்கு முடிவு கட்டலாம் : உலக சுகாதார அமைப்பு

Must read

ஜெனிவா

ந்த ஆண்டுடன் கொரோனாவுக்கு முடிவு கட்டி விடலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அட்னாம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது.  பிறகு இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவியது.  உலகெங்கும் 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. கொரோனா டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறி தற்போது ஒமிக்ரான் வைரசாக  உருமாறி உள்ளது.

ஒமிக்ரான் தொற்று டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் உலகம் முழுவதும் மூன்றாவது அலை வீசி வருகிறது.  மத்திய அரசு இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே வேளையில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருவதால், ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த ஆண்டுடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார். நேற்று உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

“உலக சுகாதார அமைப்பு கொரோனாவை முழுமையாக ஒழித்து கட்ட பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.  உலக நாடுகளுக்குத் தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது. 

எனவே உலக நாடுகள் இந்த வியூகங்களைப் பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்.  

நாம் கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளைத் தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டுமே தவிரத் தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது.”

எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article