சென்னை

மிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,72,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,54,282 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,02,90,114 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 28,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாடுகளில் இருந்து ஒருவர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 21 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 30,72,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,145 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,684 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,48,163 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,87,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 7,038 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,83,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,788 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 8,164 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,13,530 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 60,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,653 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 2,250 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,79,225 பேர் பாதிக்கப்பட்டு 2,542 பேர் உயிர் இழந்து 2,58,447 பேர் குணம் அடைந்து தற்போது 18,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,07,097 பேர் பாதிக்கப்பட்டு 2,574 பேர் உயிர் இழந்து 1,87,710 பேர் குணம் அடைந்து தற்போது 17,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.