இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் வேட்டைக்கு சென்ற சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றுள்ளது என பாசிகாட் மேற்கு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., நினோங் எரிங் உறுதி செய்துள்ளார். அதுபோல அந்த தொகு எம்.பி. தபிர் காவோவும் உறுதிப்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட சிறுவனை மீட்க இந்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.
சீன எல்லைப்பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய 2 பேர் அந்த பகுதியில் உள்ள காட்டில் வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவத்தினர் இருவரையும் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சீன ராணுவத்திடம் இருந்து ஜாணி யாயிங் அங்கிருந்து தப்பி வந்தார். மற்றோருவரான சிறுவன் மிரம் தரோன் சிக்சிக்கொண்டார். அவர் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்திச்சென்றது, ஜாணி கொடுத்த தகவலின்மூலம் உறுதியானது.
இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, சீன ராணுவத்திடம் இருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த தொகுதியின் எம்.பி.யான தபிர் காவோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். சம்பவம் குறித்து உள்துறை இணை மந்திரி நிஷித் பிரமாணிக்கிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாசிகாட் மேற்கு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங், சிறுவன் மிராம் டேரோன் சீனாவின் பிஎல்ஏவால் கடத்தப்பட்டுள்ளார் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. சீனர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவது துரதிர்ஷ்டவசமானது” . இதுகுறித்து, “(சம்பவத்தை) உறுதிப்படுத்திய எஸ்பி யிங்கியோங்குடனும் நான் பேசினேன். இது பிசிங் அருகே நடந்துள்ளது. அருணாச்சலத்தில் சியாங் மற்றும் அசாமில் பிரம்மபுத்திராவாக சாங்போ (நதி) நுழைகிறது. இந்த வழியாக சீன ராணுவத்தினர் சிறுவனை கடத்தி சென்றுள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
சீன ராணுவத்தால் சிறுவன கட்டத்தப்பட்ட சம்பவம் அந்த மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.