சென்னை: பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்க சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,
அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்,
அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்
உள்பட பல அறிவுறுத்தல்களை ன தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel