டில்லி

ழியர் தொழிற்சங்க எதிர்ப்பால் செண்டிரல் எலக்டிரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.

மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது.  அவ்வகையில் ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.   அடுத்ததாக செண்டிரல் எலக்டிரானிக்ஸ் லிமிடட் (சி இ எல்) நிறுவனத்தை விற்க முயற்சி எடுத்துள்ளது.   இந்த நிறுவனம் மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறையின் கீழ் நடக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் மின்னணு துறையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.  இதன் மூலம் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலையில் இந்த நிறுவனத்துக்கு ரூ;1,592 கோடி அளவில் ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன.    இதன் மூலம் இந்திய அரசுக்கு இந்த நிறுவனம் ரூ..730 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்புக்களில் குறிப்பிடத்தக்கவை யாக முதன் முதலாகச் சூரிய மின்கலன் (SOLAR CELL) 1977 ஆம் ஆண்டே கண்டு பிடித்தக்காகும்.  பிறகு 1978 ஆம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி நிலைய வடிவமைப்பை உருவாக்கி 1992 ஆம் வருடம் முதல் சூரிய மின்சக்தி நிலையத்தை உருவாக்கியது.   தவிர ராடார் உள்ளிட்ட பல முக்கிய ராணுவத் தளவாடங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் 100% பங்குகளையும் விற்க அரசு முயற்சி செய்தது.   இதற்காக நண்டல் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் என்னும் நிறுவனம் ரூ.210 கோடி மதிப்பில் விலைப்புள்ளி அளித்துள்ளது.   இதுவே மிகவும் அதிகமான விலைப்புள்ளி என்பதால் நிறுவனத்தை வரும் மார்ச் 2022க்குள் கை மாற்ற அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் ஊழியர் தொழிற்சங்கம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து வந்தது.   இவர்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்பதால்  இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குத் தொழிற்சங்கம் எடுத்துச் சென்றுள்ளது.  இதையொட்டி மத்திய அரசு இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.