கொல்கத்தா: அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.

1950 இல் அன்னை தெரசா  கொல்கத்தாவில்,  மிஷனரிஸ் ஆஃப் செரிட்டியை நிறுவினார். இது ஒரு ரோமன் கத்தோலிக்க தன்னார்வ மத அமைப்பாகும், இது உலகின் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு மனிதாபிமான அடிப்படையில் தனது சேவையை செய்து வருகிறது. இது 4500 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளின் சபையைக் கொண்டுள்ளது. இந்த சாரிட்டியின் உரிமம் புதுப்பிக்கப்படாததால், அதன் வங்கிக்கணக்குகளை முடக்க மத்தியஅரசு உத்தரவிட்டது.

வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) பதிவு கட்டாயமாகும். அதன்படி, சாரிட்டி தரப்பில் தாக்கல் செய்த புதுப்பிப்பு விண்ணப்பத்தை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், அதற்கான உரிமையை வழங்கியுள்ளது.

கிறிஸ்மஸ் அன்று அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கொந்தளித்தார். மத்திய அரசின் நடவடிக்கையால் 22000 அதிகமான அந்நிறுவனத்தை நம்பி உள்ள நோயாளிகள் , மற்றும் ஊழியர்கள் உணவு, மருந்துகள் இல்லாமல் தவித்து வருவதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமானப் பக்கத்தின் முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மம்தா குற்றச்சாட்டு பொய் என உள்துறை அமைச்சகமும், தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியும் மறுப்பு தெரிவித்தது.  அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் செரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு தரப்பில் இருந்து முடக்கவில்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா”வுக்கு கடிதம் எழுதியதாகவும்,

வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் கீழ் மிஷினரீஸ் ஆப் சாரிட்டி நிறுவனத்தின் உரிமையைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் சரியான முறையில்  பூர்த்தி செய்ய வில்லை என்றும், அதனால்தான், என்பதற்காக கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்யக்கோரி மிஷினரீஸ் ஆப் செரிட்டி தொண்டு நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி, இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு  தெரியும், நாங்கள் இதுக்குறித்து எதுவும் பேசப்போவ தில்லை, அதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்  என்று விளக்கம் அளித்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் சட்டப்படி சாரிட்டியை புதுப்பிக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவால் அமைக்கப்பட்ட கத்தோலிக்க மத சபையான மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் (MoC) FCRA பதிவை ஜனவரி 7 அன்று உள்துறை அமைச்சகம் (MHA) மீட்டெடுத்தது. “சில பாதகமான உள்ளீடுகள் கவனிக்கப்பட்டதால்” MoC இன் FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்று அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதனால் தற்போது பதிவு புதுப்பிக்கப்பட்டது, அதன் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நிதியைப் பெறவும் பயன்படுத்தவும் MoC தகுதியுடையதாக ஆகி உள்ளது.

[youtube-feed feed=1]