** தமிழகத்தில், ‘திருக்குறள் பேச்சு, ஒளவையார் பாட்டு… ‘ என்று மேடைக்கு மேடை முழங்கிப் பார்த்தார் பிரதமர் மோடி! ஆனால், இந்த ‘வேடங்களை’ நன்கு உணர்ந்து கொண்ட தமிழக மக்கள், தேர்தல்களில் பா. ஜ. க. வுக்குத் தொடர் தோல்விகளையே தந்தனர்!
இதனால்,” தமிழகத்தில் தங்கள் கட்சி எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது” என்பது உறுதியாகி விட்டதால் ஒன்றிய அரசு தமிழகத்தைப் பழி வாங்குகிறது என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது!
இதை மெய்ப்பிப்பது போல,ஒன்றிய பா. ஜ. க. அரசு, புயல்.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், அசாம், கர்நாடகா, ம. பி, உ. பி, மே. வங்கம் போன்ற ஆறு மாநிலங்களுக்கு ரூ 3,064 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக ஒதுக்கப் பட்டுள்ளது!
ஆனால், மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்கப்படவில்லை!
இதனால்,தங்களுக்கு வாக்களிக்காத தமிழகத்தின் மீது, ஒன்றிய அரசு ‘அலட்சியம்’ காட்டும் வகையில் இப்படி நிதி வழங்காமல் வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது!
இதனால், விரைவில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை எதிர்த்து மக்கள் இப்படி ‘ பலூன்’ விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
** கர்நாடகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பா. ஜ. க. வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது!
மொத்தம் உள்ள 1187 இடங்களில் 501 இடங்களில் காங்கிரசும், 433 இடங்களில் பா.. ஜ. க. வும் வெற்றி பெற்று உள்ளன!
ஆளும் பா. ஜ. க. வுக்கு இது பின்னடைவாக க் கருதப் படுகிறது!
** ஓவியர் இரா. பாரி.