டில்லி

துணிகள் மீது அதிகரிக்கப்பட்ட ஜி எஸ் டி உயர்வு தற்போது அமலாகாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதில் துணி வகைகளுக்கு ஏற்கனவே 5% ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்டிருந்தது.  அது தற்போது 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தவிர ரூ.1000க்கும் மேல் விலை மதிப்புள்ள காலணிகளுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது.

இந்த வரி உயர்வு நாளை அதாவது 2022 ஆம் வருடம்  ஜனவரி 1 முதல் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் டில்லியில் 46 ஆவது  ஜிஎஸ்டி குழுக் கூட்டம் நடந்தது.  அதில் கலந்து கொண்ட பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் துணிகள் மீது அதிகரிக்கப்பட்டுள்ள 5% லிருந்து 12% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு தற்போதைக்கு அமலாகாது என நிர்மலா சீதாராமன் தெரிவ்த்துள்ளர்.  தவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000க்கும் அதிகமான விலை மதிப்புள்ள காலணிகளுக்கான ஜி எஸ் டி வரி உயர்வும் தற்போது அமலாகாது எனவும் நிர்மலா தெரிவித்துள்ளார்.