சென்னை:
சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில்,
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கொங்கு ரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை ஆகிய மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.