சென்னை

குடும்ப அட்டை, ஆதார் விவரம் அளிக்காதோர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தன.   தற்போது ரூ.10.18 லட்சம் நகைக்கடன்களே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களைச் சரியாக அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி இது குறித்து,

“உண்மையான ஏழை எளிய மக்கள் நகைக்கடன் தள்ளுபடியில், பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நகைக்கடன்களில் மொத்தம் 10.18 லட்ச நகைக்கடன்களே(50 சதவீதம்) தள்ளுபடிக்குத் தகுதியானவை.  தவிர 48.84 லட்ச நகைக்கடன்களில், 7.65 லட்ச கடன்கள் 40 கிராமிற்கு மேலானவை ஆகும்.  அதே வேளையில் 21.63 லட்ச நகைக்கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்களால் 40 கிராமிற்கு மேல் பெறப்பட்டுள்ளது.

இதில் மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாகப் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன.  மொத்தமுள்ள 22 லட்சத்து 52 ஆயிரத்து 226 கடன்தாரர்களில் தற்போது 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேரின் கடன்கள் தள்ளுபடிக்குத் தகுதியானவை.

தற்போது குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்கள் சரியாக அளிக்காதவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை.  அவர்களுக்கு மீண்டும் இந்த விவரங்களுடன் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.   அவை சரி பார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்”

என அறிவித்துள்ளார்.