சென்னை
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவி உள்ளது. இன்று மாவட்ட வாரியான ஒமிக்ரான் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி அதிகபட்சமாகச் சென்னையில் 24 பேர் பாதிக்கப்பட்டு அதில் 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகி தற்போது 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக மதுரையில் 4 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.
செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Patrikai.com official YouTube Channel