ண்டன்

ஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கிறது என ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.    இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக இருக்காது என சொல்லப்பட்டாலும் அதற்கான நிரூபணம் ஏதும் இல்லாததால் மக்களிடையே கடும் அச்சம் நிலவுகிறது.  இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதையொட்டி மருத்துவ நிபுணர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் ஆகப் போட்டுக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.   குறிப்பாகப் பிரிட்டனில் இண்டஹ் மாத தொடக்கத்தில் இருந்தே பூஸ்டர் தடுப்பூசி போடுவதன் மூலம் ஒமிக்ரான் பாதிப்பு கடுமையாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ள்ன்னர்.

இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வகம் ஒரு ஆய்வை நடத்தி உள்ளது.  இந்த ஆய்வில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்ட் என்னும்  பெயரில் தயாரித்து வருகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.   இந்த ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிக மருந்துடன் ஃபைஸர் நிறுவனம் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் ஒப்பிடப்பட்டுள்ளன.  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்டிரா ஜெனிகாவின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுவதை மற்ற மருதுக்களை விட அதிகம் தடுக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பூஸ்டர் டோஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அபாயம் மற்றும் பாதிப்பின் கடுமையை வெகுவாக குறைக்கலாம் எனவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.    இந்த ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் தடுப்பூசி போட்டோர் உடலில் மற்ற தடுப்பூசிகளை விட ஒமிக்ரானை எதிர்க்கும் ஆண்டி பாடிகள் அதிக அளவில் உருவாகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.