மதுரை: ரோந்து பணியின்போது, மதுரையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.25லட்சம் நிதி அறிவித்து உள்ளார்.
மதுரை மாநகர் விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் நேற்று இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு 12.30மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த 110 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடிரென இடிந்து அவர்கள்மீது விழுந்தது. இதில், காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்கத்தூண் காவல்துறையினர் கட்டிட உரிமையாளரான இத்ரிஸ் மற்றும் வாடகைதாரர் உட்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலருக்க இரங்கல் தெரிவித்துள்ளடன், அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை கீழவெளி வீதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த விளக்குத் தூண் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சமும், காயமுற்ற தலைமைக் காவலர் கண்ணனுக்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.