கிருஷ்ணகிரி: மருத்துவ சிகிச்சை பெற விடுமுறை தர மறுத்ததால் காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி  வருபவர் சாதிக்பாஷா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் . தற்போது பணி நிமித்தமாக  சென்னை  கீழ்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சக காவலர்களுடன்  வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்று கூறப்டுகிறது. சமீபத்தில்  சில நாட்களாக  உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார. நேற்று மீண்டும்,   மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறி சாதிக்பாஷா  அறையிலேயே ஓய்வெடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை அவருடன் தங்கியிருக்கும் மற்றவர்கள், பணி முடிந்து வீடு திரும்பியபோது,  கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பூட்டை உடைத்து கதவை திறந்த போது சாதிஷ் பாஷா அறையில் தூக்கிட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து உடனே தலைமை செயலக காலனி போலீசாருக்கு அளித்தனர். விரைந்து வந்த போலீசார், சாதிக்பாஷாவின் உடலை மமீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக சாதிக்பாஷா எழுதி வைத்த இரு கடிதங்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஒரு கடிதத்தில்,  தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை  என்று குறிப்பிட்டு உள்ளதாகவும்,  மற்றொரு கடிதத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவ விடுமுறை கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிக்கு சாதிக் பாஷா எழுதி இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார், சாதிக்பாஷா சிகிச்சை பெற விடுமுறை தராமல், காவல்துறை உயர்அதிகாரி இழுத்தடித்தால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும்  விசாரணை நடத்திவருகின்றனர். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.