அமெரிக்க பல்கலைக்கழங்களில் சேருவதற்கு SAT மற்றும் ACT எனும் தகுதித் தேர்வுகள் அவசியம்.

தகுதித் தேர்வில் கருப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மாணவர்களை விட வெள்ளை இன மாணவர்களே அதிகளவு தேர்ச்சி பெறுவதாக எழுந்த சர்ச்சை விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், 2026 ம் ஆண்டு முதல் பட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் தகுதித் தேர்வு அவசியமில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2027 ம் கல்வியாண்டு முதல் இந்த கல்வி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வு முடிவுகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை, அவர்களது பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

தகுதித் தேர்வுகள் மூலம் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் படிப்பாற்றல் முழுமையாக தீர்மானிக்க முடிவதில்லை என்பதாலும் தகுதித் தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்தவிதத்திலும் பயனுள்ளதாக இல்லாத நிலையில் அதனை தொடர விருப்பமில்லை என்று இந்த பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழங்களின் இந்த முடிவை அடுத்து இந்தியாவிலும் நீட் (NEET), கிளாட் (CLAT), கேட் (GATE) போன்ற தகுதித் தேர்வுகள் நீக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.