சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்ட்டு உள்ளது.
இதுதொடர்பாக உள்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச்செயலாளருமான பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் எஸ்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக் சென்னை சிபிசிஐடி – 1 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சைபர் செல் சிபி சிஐடி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் சென்னை குற்றப்பிரிவு CID-I காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.