குன்னூர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த பிபின் ராவத் சாலைப்பயணம் மேற்கொண்டால் இசட் பிளாஸ் காவல் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.

நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இருந்து ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனவி உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.  இந்த விமானம் 10 கிமீ தூரத்தில் உள்ள வனப்பகுதியில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து அனைவரும் உயிர் இழந்துள்ளனர்.   இதையொட்டி அங்கு சென்று சோதனையிட்ட போது அங்கு மேகம் கொண்ட வானிலை இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து குன்னூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர், “இந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் குறைவான உயரத்தில் இந்த ஹெலிகாப்டர் பறந்துள்ளதைக் கண்டுள்ளார்.  அது திரும்பும் போது அங்கிருந்த மரத்தில் மோதி வெடித்து சிதறியதையும் அவர் பார்த்துள்ளார்.  அப்போது அங்கு வானிலை மேக மூட்டமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.” எனக் கூறி உள்ளார்.

அவ்வளவு குறைந்த உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்ததற்கான காரணம் தெரியவில்லை என்பதும் இது குறித்து ஹெலிகாப்டரில் இருந்து அவசர செய்தி அனுப்பப்பட்டதா என்பதும் இது குறித்து தெரியவில்லை.    இந்த விபத்து செய்தி அறிந்ததும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.   தற்போது நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் ஒரு குழு அமைத்து விசாரணை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காவல்துறையினர் ஒருவேளை பிபின் ராவத் சாலைப்பயணத்தை மேற்கொள்ள இருந்தால் இசட் பிளஸ் பாதுகாப்பு தயாராக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.   மேலும் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியிலும் பிபின் ராவத் பாதுகாப்புக்காக இசட் பிளஸ் காவல் போடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.