மதுரா
மதுரா நகர் மசூதியில் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்னும் அறிவிப்பால் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் கிருஷ்ண பிறந்த இடம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்து அமைப்புக்கள் இந்த புனிதமான இடத்தில் ஒரு மசூதி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. மேலும் 4 அமைப்புக்கள் இந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாக அறிவித்துள்ளன. மதுரா நகரில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மசூதிக்கு அருகில் கேஷவ் தேவ் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அகில பாரத இந்து மகா சபை, ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமி நிர்மாண் நியாஸ், நாராயணி சேனா, மேலும் ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு அனுமதி வழங்க மாவட நீதிபதி மறுத்துள்ளார்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதியான நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் வருவதால் காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரா நகரம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் நகர் கொண்டு வரப்பட்டுள்ளது.