டில்லி

வீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை உபி மாநிலம் அமேதியில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்து வருகின்றது.    இப்போது அடுத்த கட்டமாக நவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகளைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது.    இந்த ரகத் துப்பாக்கிகள் 7.62 மிமீ அளவிலான துப்பாக்கி தோட்டாக்களை வெளிப்படுத்தும் வகையிலும் 5.56 மிமீ சுற்றளவைக் கொண்டதாகவும் இவை அமைத்துள்ளன.

இந்த துப்பாக்கிகள் கடந்த 30 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு மாற்றாக இடம்பெற உள்ளன.  இவை 300 மீட்டர் தொலைவு வரை எதிரிகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.   இது மூன்று கால்பந்து மைதானத்துக்கு இணையான தூரம் ஆகும்.  இவை தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ராணுவத்தினர் பயன்படுத்த ஏற்றதாகும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் கோர்வா என்னும் இடத்தில் அரசு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.  இங்கு இந்த துப்பாக்கிகளைத் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது,.  இந்த தொழிற்சாலையில் 5 லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிக்க உள்ளதாகவும் இது இந்தியாவின் சுயச்சார்பு கொள்கையின் அங்கமாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.